Ads (728x90)


அனலைதீவு கடற்தொழிலாளர் சங்கது்தின் வேண்டுகோளிற்கமைய ஊர்காவற்துறை பிரதேச செயலத்தினால் அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத்துறை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி மீன்பிடித்துறையை ஆழப்படுத்தல் திட்டமானது கடற்தொழிலாளர் சங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு செயற்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்கமைய ரூபா. 5 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு மீனவர்களிடம் வைபவரீதியாக கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.

.ஆபத்தான கடற் பாறைகள் நிறைந்த கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இது நாள் வரையில் பெரும் இன்னல்களையும், அசௌகரியங்களையும் அப்பிரதேச மீனவர்கள் சந்தித்து வந்துள்ளார்கள். இத்திடத்தின் பயனாக இனிவரும் காலங்களில் பாதுகாப்பான முறையில் அப்பிரதேச மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் என கடற்தொழில் சங்கத் தலைவர் ஜோன் பொஸ்கோ தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget