Ads (728x90)


அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறல்ல, வனதமுல்ல “ஓவல் வியூ ரெசிடென்சி” அடுக்கு மாடி குடியிருப்பு நாளை 05 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 

அரச ஊழியர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின்  கீழ் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த குறித்த அடுக்குமாடி வீட்டுத் தொடரின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

பி.சரவணமுத்து விளையாட்டு அரங்குக்கு அருகே அமைந்துள்ள இவ்வீட்டு திட்டத்தில்  உள்ள சுமார்  608 வீடுகளும் ஏற்கனவே 15-20 ஆண்டுகளில் அரசு சேவையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி வீட்டு தொடரில் மூன்று படுக்கையறைகளுடன் கூடிய 304 வீடுகளும், இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய 304 வீடுகளும் உள்ளன. இந்த திட்டத்திற்கு 06 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டு திட்ட வளாகத்தில் ஒரு கார் பார்க், குழந்தைகள் பூங்கா, இரண்டு உடற்பயிற்சி மையங்கள், ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget