Ads (728x90)


மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது.

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக மங்களேஸ்வரி சங்கர், கட்சியின் பொதுச்செயலாலர் பிரசாந்தன் அவர்களும், மகாவலி நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் சாணக்கியன் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாலர் பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் மற்றும் அதிகாரிகள், பண்ணையார்கள், சிவில் சமூக பிரதிநிதி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்கள் என பலரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் நவம்பர் 02 ஆம் திகதி குறித்த பிரதேசத்திற்கு கள விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget