Ads (728x90)


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - மருதங்கேணியிலும், கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் பகுதியிலும் குறித்த மருத்துவமனைகள் தயார் செய்யப்படுகின்றது.

மருதங்கேணியில் உருவாக்கப்படும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனை 19 ஆம் திகதி பூர்த்தி செயற்படவிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால் மருதங்கேணி கொரோனா மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்படும். மருதங்கேணி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிறிதொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்திற்கான கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இதன் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது. சுமார் 100 படுக்கைகள் கொண்டதாக இந்த மருத்துவமைன அமைக்கப்படவுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget