Ads (728x90)


இலங்கையில் கொரோனா தொற்று ஆபத்து அதிகரித்தால் அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாதது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படலாம் என தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸுக்கு அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் மினுவங்கொடை, கம்பஹா மற்றும் காட்டுநாயக்க பகுதிகளில் வசிப்பவர்கள். அவர்களில் இருவர் மட்டுமே கொழும்பில் வசிப்பவர்கள், வத்தளை மற்றும் கந்தான பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget