Ads (728x90)


முல்லைத்தீவு, முறிப்பு காட்டுப்பகுதியில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது மரக் கடத்தல் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் நடைபெற்றது.

தொடர்ந்து போராட்டவாதிகளால் மாவட்ட வன அலுவலகம் முற்றுகையிடப்பட்டதுடன் அவ்வலுவலகம் முன்பாக மரங்கள் நாட்டப்பட்டது. அத்துடன் பொலிஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இறுதியில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget