கொழும்பிலுள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு-10 இலுள்ள ஹட்டன் நஷனல் வங்கி டவரின் 19 வது தளத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தளத்தில் உள்ள ஊழியர்களை பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளதாகவும், அவர்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
உடனடியாக குறிப்பிட்ட கட்டிடத்தை முழுமையாக தொற்று நீக்கலுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள வங்கி நிர்வாகம், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு அது சமூக பரவலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Post a Comment