Ads (728x90)

பிரான்ஸில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து செல்வதை தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட  08 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.


இந்த ஊரடங்கு சட்டம் இரவு 09 மணி முதல் காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என பிரரன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நான்கு வாரங்களுக்கு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர பிரான்ஸில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் வைரஸ் பரவும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் ஹோட்டல்கள், உணவகங்களை உரிய காலத்திற்கு முன்னர் மூடுமாறு ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டில் நாளொன்றில் 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஜேர்மனி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget