Ads (728x90)


இலங்கை தமிழிரசுக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவராக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் ப.சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget