Ads (728x90)


இலங்கையில்  வௌிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை 4,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பிலிருந்த மேலும் 729 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 729 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 832 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget