மத்திய சுற்றாடல் அதிகாரசபை இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் இலத்திரனியல் கழிவுகளை எதிர்வரும் சனிக்கிழமை வரை அருகிலுள்ள தபால் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து தபால் நிலையங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது.
ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக தபால் தினம் கொண்டாப்படவுள்ள நிலையிலே இலங்கை அஞ்சல் திணைக்களமானது ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க திட்டமாக இதனை தொடங்கியுள்ளது.
கணனிகள், தொலைக்காட்சிகள் , வானொலிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்சார உபகரணங்களை அருகிலுள்ள தபால் நிலையங்களில் பொது மக்கள் ஒப்படைக்கலாம் . இச்செயற்றிட்டமானது நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment