நாடளாவிய ரீதியில் அரச, தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை 05 ஆம் திகதி முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 09ஆம் திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆயினும் தற்போது நாட்டில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், குறித்த பகுதிகளில் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை நாளை வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment