கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் ஏழு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கிராமங்களுக்குப் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட கம்பஹா வன்னே திவுலபிட்டிய , மினுவாங்கொட வெதகெதர, பெம்முன்ன, ஹோரகஸ்முல்ல, ஹப்புவலான, ஹேன்பிடிகேதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய கிராமங்களுக்குப் பொதுமக்கள் உள்நுழை வதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment