யாழ்.குருநகர் கடலுணவு நிறுவன பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
குருநகர் பகுதியிலுள்ள கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகரை சேர்ந்த ஒருவருக்கும், பருத்துறையை சேர்ந்த ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் விற்பனைக்காக சென்று வந்தவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு பேரும் காெரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment