இவர்களில் 07 சிறுவர்கள் மற்றும் 03 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற வளாகத்தில் சேவையாற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இந்
நிலையில் பாராளுமன்ற கட்டட தொகுதியை இரு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டட தொகுதி மற்றும் வளாகத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை குளியாப்பிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பக்கமுனவில் வடை வியாபாரி ஒருவர் இறால் வாங்குவதற்கென பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
ஹம்பாந்தோட்டையில் இரண்டு கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவராவார். இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தை என்பன மூடப்பட்டுள்ளது.
கொட்டகலை நகரில் 02 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் அப்பகுதியில் கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
பேலியகொனட மீன் சந்தைக்கு சென்ற வந்த இரண்டு நபர்களுக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அம்பன்பொல நகரின் வர்த்தக நிறுவனங்கள் முடப்பட்டன.
பேலியகொடவுடன் தொடர்புடைய மேலும் 02 மீன் வியாபாரிகள் மாத்தளை கலேவெலயில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாக அனுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி – கொட்டிகாவத்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து சுமார் 25 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கேகாலை தெஹியோவிட்ட பகுதியின் தல்துவ, மேல் தல்துவ உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து அக்கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment