2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. வெட்டுப்புள்ளிகளை https://admission.ugc.ac.lk/ என்ற பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை நடைபெற்றதால் தனி வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சைகள் 2019 ஓகஸ்ட் 05ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 315 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,278 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றன. இப்பரீட்சைக்கு புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 187,167 பேரும் பழைய பாடத்திட்டத்திற்கமைய 94,619 பேரும் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 113,637 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும், 67,489 பேர் புதிய பாடத்திற்கு அமையவும் இம்முறை 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Post a Comment