கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படும் தினம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையும், 12 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment