புங்குடுதீவு பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கம்பகா மாவட்டத்தில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதில் இருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள். இவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
கடந்த 30 ஆம் திகதி மற்றும் 03ஆம் திகதியில் இருவர் இங்கு வந்துள்ளார்கள். அவர்களில் 3 ஆம் திகதி வந்தவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புங்குடுதீவு பகுதியில் அதாவது கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment