பிரித்தானியாவில் 04 வாரங்களுக்கு நாடளாவிய பொதுமுடக்கலை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன.
பிரித்தானியாவில் பொது முடக்கல் அமுல்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கல்வி மற்றும் உடற்பயிற்சி தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் வீடுகளில் இருந்து வௌியேற அனுமதிக்கப்படவுள்ளனர். எனினும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 22,000 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மேலதிக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி தொற்று நிலையை குறைக்காது விட்டால் நாளொன்றிற்கு 4,000 அதிகமான மரணங்கள் சம்பவிக்க கூடுமென அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment