மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை 7,185 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரியில் இலங்கையில் முதலாவது தொற்றாளராக சீனப் பெண்ணொருவர் இனங்காணப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையான சுமார் 09 மாத காலப்பகுதியில் நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,382 ஆகவே காணப்பட்டது.
எனினும் ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான 29 நாட்களில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என மினுவாங்கொடை இனங்காணப்பட்ட முதல் நாள் தொடக்கம் மாத இறுதி வரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment