Ads (728x90)


தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நேற்று பகல் நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget