மக்கள் பொறுப்புணர்வுடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் நாட்டை முடக்கும் அவசியம் எழப்போவதில்லை என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் பழக்கம் மக்களிடம் குறைவாக உள்ளது. மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பொறுப்புணர்வுடன் பின்பற்றினால் நாடு முடக்கப்படும் நிலையே அவசியமற்றது.
எது எவ்வாறிருப்பினும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றியவாறு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதற்கான தயார்ப்படுத்தல்களை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment