வௌ்ளைச் சீனிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இன்று முதல் அமுலாகும் வகையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளைச் சீனிக்கு ஆகக் கூடுதலான சில்லறை விலை 85 ரூபாவாகவும், பொதியிடப்பட்டது ஒரு கிலோ 90 ரூபாவாகவும், இறக்குமதியாளரின் மொத்த விற்பனை விலை கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment