Ads (728x90)


அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 03 திகதி நடைபெற்ற நிலையில் நவம்பர் 04 ஆம் திகதியிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான ஜோ பைடன் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்து விட்டதாகவும் விரைவில் அவரது வெற்றி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது, கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ட்ரம்புக்கு சாதகமான உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளது.

அதாவது பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்குகள் எண்ணப்படும் போது கண்காணிப்பாளர்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன் இருப்பதால் டிரம்ப் மீண்டும் அதிபராக வாய்ப்பே இல்லை என கருதப்படுகிறது


Post a Comment

Recent News

Recent Posts Widget