Ads (728x90)


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அவர் வெற்றி பெற்று அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

சற்றுமுன் வெளியான தகவலின்படி ஜோபைடன் அவர்களுக்கு 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் ஜோபைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என்பதும், அவருக்கு இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தோல்வி உறுதி என தெரிய வந்ததை அடுத்து பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பினர் அதிரடியாக உச்ச நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை எண்ணிய வாக்குகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும், மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்றும் டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா ஆகிய பகுதிகளில் டிரம்ப் முன்னிலையில் உள்ள நிலையில் தபால் வாக்குகள் ஜோபைடனுக்கு சாதகமாக செல்ல வாய்ப்புள்ளதால் டிரம்ப் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget