கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 தாய்மாருக்கும், 20 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பொறுப்பதிகாரி விஜயசூரிய தொிவித்திருக்கின்றார்.
குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வைத்தியருக்கு தமது வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றவில்லை என விஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு அச்சப்படதேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்தவித தடங்கலுமின்றி மருத்துவ சேவை தொடர்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment