Ads (728x90)


கமல் ஹாசனின் புதிய திரைப்படமான ”விக்ரம்” திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வௌியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காட்சியாகவுள்ள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்த தினமான நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வௌியாகியிருந்தது.

அவரின் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்பில் இந்நாட்களில் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை வௌிவந்துள்ளமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

1986 இல் ” விக்ரம்” என்ற பெயரில் கமலின் படம் வௌிவந்திருந்ததுடன், அதுவும் அதிக வசூலைப் பெற்றுக்கொடுத்திருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget