யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று துரையப்பா விளையாட்டரங்கை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துரையப்பா மைதானத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
துரையப்பா மைதானத்தில் உதை பந்தாட்டத்திற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் உதைபந்தாட்ட லீக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. போட்டிகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் போது இந்த மைதானம் முக்கியமானதாக விளங்கும். செயற்கை ஓடுதளம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் . அது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். 2022 ஆம் ஆண்டு துரையப்பா மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும். அத்தோடு இங்குள்ள அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment