Ads (728x90)

கொரோனா அபாயம் காரணமாக வட மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பொதுச்சந்தைகள் மற்றும் திருமுண மண்டபங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவற்றை மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவால் அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். திருமண மண்டபங்களை 150 பேருடன் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

Post a Comment

Recent News

Recent Posts Widget