கொரோனா வைரஸின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்த நிலையில் கனடா- அமெரிக்கா எல்லையானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், வர்த்தக மற்றும் அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இது ஒரு முக்கியமான முடிவு. மேலும் எல்லையின் இருபுறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலையில் இரு நாடுகளும் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவில் இதுவரை 17,000 க்கும் அதிகமானோரும், அமெரிக்காவில் 375,000 க்கும் அதிகமானோரும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment