Ads (728x90)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாது. அதற்கென ஒரு பொது விதி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget