Ads (728x90)

கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் 18ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதென யாழ்ப்பாணம் ரயில்வே நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரண்டு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. முதலாவது சேவையாக காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும்.

உத்தரதேவி கடுகதி ரயில் சேவை காங்கேசன்துறையிலிருந்து காலை 9.00 மணிக்கு புறப்படும். கொழும்பு புறக்கோட்டையில் 6.35 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும், முற்பகல் 11.50 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயில் சேவையும் சேவையை மீள ஆரம்பிக்க இருக்கின்றன.

ஏனைய ரயில் சேவைகள் 25ஆம் திகதி தொடக்கம் இரவு தபால் சேவை உட்பட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக மீள ஆரம்பமாக இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.




Post a Comment

Recent News

Recent Posts Widget