சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனவரி 25ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திற்கு வெளியே தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பின் இருக்கை திறனில் 50 சதவீதமும், அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும்.
இக்கல்வி நிறுவனங்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும்.
பின்னர் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வகுப்புகளையும் ஆரம்பிக்க முடியும்.
பயிற்சி வகுப்புகளை எவ்வாறு நடாத்துவது மற்றும் கடினமான நேரத்தில் வகுப்பறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக கல்வி வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள், இச்சுற்றறிக்கையில் உள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேல் மாகாணத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்துவது மேலும் தாமதமாகும். மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தனியார் வகுப்புகள் தொடங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை நடாத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.
Post a Comment