எனினும் இதன் போது பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் உள்ளிட்ட 03 முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டிலிலுருந்து வந்தாலும் சகல சுற்றுலா பயணிகளும் பின்வரும் மூன்று பிரதான விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும்.
1. நாட்டுக்கு வருவதற்கு முன்னர் ஹோட்டலொன்றை பதிவு செய்திருத்தல்.
2. விசேட கொவிட் காப்புறுதி செய்திருத்தல்.
3. தமது நாட்டிலிருந்து இலங்கைக்கான விமானத்தில் ஏறுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.
விசேட கொவிட் காப்புறுதி பற்றி கூறும் போது நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லல் , தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெறுதல் மற்றும் அறிகுறிகள் எவையும் இன்றி தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் தொற்றாளர் விரும்பும் பட்சத்தில் பதிவு செய்துள்ள ஹோட்டல் அறையிலேயே தங்கி சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்டவற்றுக்கு குறித்த காப்புறுதி பயன்படும்.
சுற்றுலா பயணி நாட்டுக்கு வந்த பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டால் அரசாங்கத்திற்கு சுமை அற்ற வகையில் தனியார்துறை ஊடாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். பி.சி.ஆர். பரிசோதனைகளும் அரசாங்கத்திற்கு சுமையற்ற வகையிலேயே முன்னெடுக்கப்படும்.
சுற்றுலா பயணிகள் சாதாரணமாக சமூகத்திற்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள் நிச்சயம் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் குறுகிய காலத்தில் சுற்றுலா பிரயாணத்தை நிறைவு செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினால் பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் சுகாதாரத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'பயோ பபல்' செயற்திட்டத்திற்கமைய சுற்றுலாவை நிறைவு செய்யலாம்.
இதன் போது அவர்கள் சமூகத்துடன் தொடர்பை பேண முடியாது. நாம் முழு நாட்டுக்கும் உதவும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment