தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் தொல்லியல் ஆய்வு பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் இராணுவத்தின் பிரசன்னத்துடன் புத்தர்சிலை கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
Post a Comment