Ads (728x90)

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இம்முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிடலாம் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2019 இல் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 4,989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது. 717,246 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெற்றுகொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 0112784537, 0112784208, 0113188350, 0113140314 எனும் எண்களிற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்தத்திற்கு 57,155 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget