Ads (728x90)

இலங்கையில் விபத்துகளினால் நாள் ஒன்றுக்கு 8-10 பேர் வரை உயிரிழப்பதுடன் 40 - 50 பேர் வரை காயம் அடைகின்றனர். 

இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகள் காரணமாக நேற்று வியாழக்கிழமை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 8 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சிய 7 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களாவர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 08 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள். ஏனைய 06 பேர் பாதசாரிகளாவர். ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவராவார்.

அதனால் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் செல்பவர்கள், சாரதிகள், பாதசாரிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டாலும்  விபத்துகளை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget