Ads (728x90)

இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவம், கௌரவம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இடம்பெற்ற பா.ஜ.கவின் இளைஞர் அணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்றவர்களின் மண்ணிற்கு வருவது குறித்து பெருமிதம் அடைவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1974 இல் காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கையிடம் கையளித்தவேளை வாஜ்பாய் அதனை கண்டித்தார் என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கு எதிராக வாஜ்பாய் நீதிமன்றம் சென்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மகள் புரட்சி தலைவி அம்மாவே முதலாவது வாஜ்பாய் அரசாங்கத்தை முழுமனதோடு ஆதரித்தவர் என்பதை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் போன்று இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டுடன் விசேட உறவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் தமிழ் மக்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மோடி தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 இல் பிரதமரான பின்னர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். உள்நாட்டு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த சகோதர, சகோதரிகளிற்கு நாங்கள் வீடுகளை வழங்கியுள்ளோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget