உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 164 வது பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலைமை சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஜனாதிபதி அவர்களை வரவேற்றார். ஜனாதிபதி அவர்களினால் சிகப்பு சந்தன மரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட சாரணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அவற்றை கவனித்து கொள்வார்கள்.
“துரு“ கையடக்க தொலைபேசி செயலியின் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டம் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.
Post a Comment