Ads (728x90)

இலங்கைக்கான அமொிக்க துாதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் யாழ்.பல்பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு புதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பி.சி.ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவிடம் பி.சி.ஆர் இயந்திரத்தைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget