இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் எவருக்கேனும் இதுவரை பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லையாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து, பரீட்சை அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்து அனுமதி அட்டையின் பிரதியொன்றை பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை கொவிட் 19 பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளதால் பரீட்சார்த்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இல்லாதவர்கள் பரீட்சைகள் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படத்துடனான கடிதத்துடன் பரீட்சைக்கு நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.
பரீட்சை மண்டபத்துக்கு நேரத்துடன் சமூகமளித்து அனுமதி அட்டை, விண்ணப்பித்த பாடம், பாட இலக்கம் என்பவற்றை சரிபார்த்தல் வேண்டும்.
அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்வதற்கு onlineexams.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து அதனை சீர்செய்யலாம். ஒருமுறை மாத்திரமே அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment