Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும், பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார் என்பதை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைக்கேட்ட பின்னரும் நீதியை தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்று எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget