ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கை மீதான உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐ.நாவிற்கான அமெரிக்க நிரந்தர வதிவிட பிரதிநிதி டானியல் குரோனென் பீல்ட் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுதல் மற்றும் சுயாதீன ஊடகங்கள், சிவில் சமூகத்திற்கான இடைவெளிகளை சுருக்குவது போன்ற விடயங்களால் நாங்கள் கவலையடைகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
மோதல் கால துஷ்பிரயோகங்களுக்கு நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட நியமனங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எழுப்பப்பட்ட கவலைகளை தீர்க்க இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு செயல்முறை மூலமான முயற்சிகள் அர்த்தமுள்ளதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு பொறுப்புக்கூறலை தொடரும் ஆணையைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாங்கள் அவதானிக்கிறோம். காணாமல் போனவர்கள் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளுக்கான மரியாதை இலங்கையின் நீண்டகால அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமானது. நீதி மற்றும் நல்லிணக்கம், பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான உறுதியான படிகளை இலங்கை அரசாங்கத்தை அர்த்தமுள்ளதாக எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment