உடல்களை அடக்கம் செய்வதென்றால் சுகாதார பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மயானம் அல்லது அனுமதியளித்த இடத்தில் அந்த அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரால் ஏற்கனவே 2020 ஏப்ரல் 11 ஆம் திகதியிடப்பட்ட 2170/8 இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் தகனம் செய்யப்பட்டு வந்தனர்.
அதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் தற்போது புதிய அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment