இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா ஜெர்மனியின் நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். இவரை தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபா 80 லட்சம் மோசடி செய்ததாக தெரியவருகின்றது.
தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக நடிகர் ஆர்யா மீது விட்ஜா ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார். அத்துடன் அவர், தனக்கும் நடிகர் ஆர்யாவின் தயாருக்கு நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார்.
இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விட்ஜா தெரிவித்ததாவது, நான் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணி புரிகிறேன். கொரோனா வைரஸ் லொக்டவுன் காரணமாக தனக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால் பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார்.
அத்தோடு உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றார். பிறகு பணத்தை என்னிடமிருந்து பெற்றார். சில மாதங்கள் கழித்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது எனக்கு தெரிந்ததாகவும், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment