Ads (728x90)

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்த கருத்திற்கு பதிலளிப்பதற்காக நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றம் அடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

மைத்திரியின் அருகிலிருந்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள். ஜனாதிபதி அந்த பிள்ளைகளை காட்டினால் எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம். அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

எமது குழந்தைகளை இராணுவம் அழைத்து சென்றதுதான் உண்மை. எனவே எமது பிள்ளைகளை அழைத்துச் சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடன் புதிய அரசியலமைப்பு பற்றி பேச வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்க விரும்புகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்கள் இங்கு வந்து தமிழர்களை ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடிய அரசியலமைப்பு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget