இளைஞர் விவகார மேம்பாடு, விவசாயத்துறை, திறன் அபிவிருத்தி பரிமாற்றம், சுகாதார தாதிகள் சேவை பரிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பரிமாற்ற செயற்றிட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது பொருளாதாரம், முதலீடு, சந்தை, தொழில்நுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் இதன்போது பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

Post a Comment