Ads (728x90)

வெளிநாடுகளில் பணிபுரிந்து நாட்டுக்கு திரும்பும் பணியாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் அனுமதி, வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஹோட்டலில் தனிமைப்படுத்தும் அரசாங்கத்தின் சதியிலிருந்து வெளிநாட்டு பணியாளர்களை பாதுகாப்போம், 'ஒரு நாடு - ஒரே நீதி'  போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா, ஹரின் பெர்னாண்டோ, ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார, மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள பணியாளர்களும், தற்போது வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ள பணியாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget