இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர்களது பயிற்சிக்காலம் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று நிலமையில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி கற்ற இளம் சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வைப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் அரசியலைக் கருத்தில் கொள்ளலாம் கல்வியை மாத்திரம் அடிப்படைத் தகைமையாகக் கருதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியலை https://www.pubad.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Post a Comment