Ads (728x90)

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனச் சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி தற்போது கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் சாரதிகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது அவசியம் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார்.

இந்த சாரதி அனுமதிப்பத்திரம் இரண்டு வார பயிற்சி காலத்திற்குப் பிறகு சாரதிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பேருந்து சாரதிகளுக்கு, புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் செயல்முறை அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வீதி விபத்துகளின் விளைவாக உயிரிழப்போரின் எண்ணிக்கை சமீபத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. விபத்துக்களால் தினமும் குறைந்தது ஒன்பது நபர்கள் உயிரிழக்கின்றனர். இதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget